குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்;சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் மற்றும் அனைவருக்கும் கணிதம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்களுடனான கலந்துரையாடல் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
அத்துடன் கிளிநொச்;சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்கள்
ஆசிரியர்களின் இடமாற்றங்கள் செய்யப்படுகின்ற பொழுது அதிபர்களும் கல்வித்திணைக்கள அதிகாரிகளும் சற்று மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.ஆசிரியர்களை உள ரீதியாக பாதிப்படைய செய்து இடமாற்றம் செய்தால் அவர்களுடைய உண்மையான அர்ப்பணிப்பை பெற்றுக் கொள்ள முடியாது.எனவே சுற்று நிரூபத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது அவர்களுடைய விருப்பத்துடன் செய்தால் அது சிறப்பாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கணிதம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்களுடனான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் வட மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் செ.உதயகுமார் வலய கல்வி பணிப்பாளர்கள் அதிபர்களும் கலந்து கொண்டனர்.