183
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
மகிந்தவின் ஆட்சியில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சியில் இல்லை! வேலையற்ற பட்டதாரிகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்று வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியல் தேர்வு குறித்தும் பல்வேறு அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர்.
5ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது குறித்த நியமனத்திற்காக பட்டியல்கள் மாவட்ட அரச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சில மாவட்ட செயலகங்களில் ஒட்டப்பட்ட நியமனப்பட்டியல்கள் சில மணித்தியாலத்திலேயே கிழித்து எறியப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
5ஆயிரம் பட்டதாரிகளில் வடக்கில் கிளிநொச்சியில் வெறும் 35 பேருக்கு மாத்திரமே பட்டதாரிப் பயிலுனர்களாக நியமனம் அளிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் சுமார் 500 வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இந்த நியமனப் பட்டியலில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்றும் பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டில் உள்ள 20ஆயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனம் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பட்டதாரிகள் கிளிநொச்சியை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டில் சுமார் ஏழாயிரம் பட்டதாரிகள் பயிலுனர்களாக உள்ளீர்க்கப்பட்டனர். அவர்கள்கூட மகிந்த ராஜபக்ச காலத்தில் பட்டியலிடப்பட்டவர்கே என்று தெரிவித்துள்ள பட்டதாரிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்றும் மேலும் குறிப்பிடுகின்றனர்.
Spread the love