குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
sdrகடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் மரணமடைந்திருந்தார்.
சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. எனவே மரணமான இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக முப்பது இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனா்.
குறித்த பணத்தை மரணமான நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்துள்ளனா் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனா் . நிதர்சின் குடும்பத்தினருக்கு மீள் குடியேறி இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…