இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் இவ்வாறு எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பீடி, சிகரெட்டுகளுக்கு பதிலாக பய்கபடுத்தப்படும் இந்த எலக்ட்ரானிக் சிகரெட்டில் நிக்கோடினின் அளவு அதிகளவில் இருப்பதாக பல முறைப்பாடுகள் எழுந்துள்ளன. பரிசோதனைகளின் போது இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். இதில் அக்ரோலின், அசிட்டால்டிலைடு போன்ற மூலக்கூறுகள் கலக்கின்றன எனவும் இவை உடல் நலத்துக்கு கேடானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இ. சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலுமஇதற்கு தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.