நிதர்சனின் பெற்றோர்கள்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Jun 15, 2018 @ 20:10
தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணித்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுஙக்ள் என இளைஞனின் பெற்றேர்கள் உருக்கமாக கோரியுள்ளனர்.
“எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றிருகின்றார். இதன் போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார். இதனை எமது பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினர் தன்னுடைய அரசியலாக்க முற்பட்டார் நாம் அதற்கு இடம்கொடுக்கவில்லை இந்த நிலையில் அவர் முகநூல்கள் மூலம் எங்களை பற்றியும் எங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அழைத்துச் சென்ற போதகர் பற்றியும் அவதூறு செய்து வருகின்றார். தயவு செய்து எமது மகனின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று இந்த இடத்தில் நாம் வினயமாக கேட்டுநிற்கின்றோம்”
“எமது மகனின் மரணத்தில் இனவாதத்தை தூண்ட இவர்கள் முயற்சி செய்கின்றார்கள் அதனை நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்த அவர்கள். மகனின் உடலை கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு கொண்டுவருவதிலும் கூட இவர்கள் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையில் இலவசமாக கொண்டு வருவதாக சொன்னார்கள் பின்னர் எரிபொருள் மாத்திரம் வழங்குமாறு தெரிவித்தனர் இதன் பின்னர் உடலை வீட்டுக்கு கொண்டுவந்த பின்னர் முப்பதாயிரம் எனத் தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்டனர் எனவும் கவலை தெரிவித்தனர்.”
தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு