உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 3-3 என சமனில் முடிந்ததனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக இன்று நடைபெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டியில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், இரண்டாவது போட்டியில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியையும் வெற்றியீட்டியிருந்தன.
அதேவேளை நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் – அவுஸ்திரேலியா, அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து, பெரு – டென்மார்க், குரோசியா – நைஜீரியா அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது