குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்றையதினம் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்டார். இந்த மக்கள் சந்திப்பு திருவையாறு பகுதியின் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் நிறைவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாய செய்கைகள் மேற்கொள்ளும்போது இங்குள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடலில் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது, அவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் எனத தெரிவித்தார்
அத்தோடு விவசாய போதனாசிரியர்களிற்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக காணப்படுகின்றது. குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு தென்னிலங்கையில் இருந்து பலர் நியமிக்கப்பட்டமை குறித்த தாம் எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுத்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்கள் நிரப்படாமேலே காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அங்கஜன் இதன்போது தெரிவித்தார்.