பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், மேற்கிந்தியதீவுகளில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய குற்றசாட்டுத் தொடர்பில் டேவிட் வார்னருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஒரு வருட தடை விதித்தமையினால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் கழக, லீக் வகையிலான போட்டிகளில் மட்டும் விளையாட பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேந்கிந்தியத் தீவுகளில் ஓகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள கரிபீயன் பிரிமீயர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.