கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அதினமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளது. அத்துடன் அங்கு வள்ளம் பெருக்கெடுத்து ஓடுகி வதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோழிக்கோடின் வயலூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இதற்கிடையே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 6 மாவட்ட செயலாளர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.