நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த அகதிகள் படகு மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் அருகே நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
அவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலியும், மால்டாவும் மறுத்து விட்ட நிலையில் நடுக்கடலில் கடந்த 9 நாட்களாக தவிக்க நேரிட்ட நிலையில் படகுகளில் இருந்தவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர். அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 123 சிறுவர் – சிறுமியர் மற்றும் 7 கர்ப்பிணி பெண்களும் இருப்பதனால் தொண்டு நிறுவன ஊழியர்கள், வைத்தியர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது