ரம்ழான் நோன்புக் காலத்தினையொட்டி தலிபான் அமைப்பினருடன் ஏற்படுத்திக்கொண்ட தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்தைக்கு வர வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி வலியுறுத்தியுள்ளார்.
நாங்கர்ஹர் பகுதியில் தாலிபன்களும், அரசாங்க அதிகாரிகளும் கூடிய கூட்டம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நிலையில் தலிபான்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.