177
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், மிலொஸ் ராவ்னிக்கை எதிர்கொண்ட நிலையில் பெடரர் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று பெடரர் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதனையடுத்து பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love