குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற மனசாட்சியின் சுதந்திரம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டு பக்கமும் கால்களை வைத்து கொண்டு எதிர்க்கட்சிக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடும் தேவை எமக்கில்லை. அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீதமுள்ள உறுப்பினர்களையும் எதிர்க்கட்சிக்கு வரவழைப்பதே எமது அணியின் எதிர்ப்பார்ப்பு.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்க்கட்சியின் பலமான கூட்டணி ஒன்று உருவாக்கப்படும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 14 வீத வாக்குகளை பெற்றது. அதில் 2 வீதமான தமது அணி தனக்கு பெறுமதியானது என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.