Home உலகம் இணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்

இணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்

by admin

Smoke rises from a house blaze in Takatsuki, Osaka, following an earthquake Monday, June 18, 2018. A strong earthquake shook the city of Osaka in western Japan on Monday morning, causing scattered damage including broken glass and partial building collapses. There were no immediate reports of injuries. (Kyodo News via AP)

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் உள்ள ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றையதினம் இடம்பெற்ற நிலநடுக்கப்பத்தில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டதுடன் புகையிரத சேவைகள் தடைப்பட்டதாகவும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்

Jun 18, 2018 @ 03:47

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று மிதமான நலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் ஏற்பட்டுள்ள ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சமடைமந்து வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More