ரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்கொரியா மற்றும் சுவீடன் அணிகள் போட்டியிட்டன. இதன்போது முதல்பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. அடுத்து 2வது பாதி நேரத்தில் சுவீடனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி அந்த அணியின் அட்ரியாஸ் கிராங்க்விஸ்ட் கோல் அடித்தார். இதனால் சுவீடன 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் 60 வருடத்திற்குப் பிறகு ஸ்வீடன் முதல் ஆட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளது.
இன்றைய இரண்டாவது போட்டியில் பனாமா மற்றும் பெல்ஜியம் அணிகள் விளையாடிய நிலையில் 3-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றுள்ளது. அதேவேளை மூன்றாவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும் துனிசிய அணியும் விளையாடிய நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் நாளையதினம் நடைபெறவுள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா – ஜப்பான், போலாந்து – செனகல், ரஸ்யா – எகிப்து அணிகள் போட்எயிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது