யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் நேற்று மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியேற முடியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 62.95 ஏக்கரும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரேதச செயலாளர் பிரிவில் 5.94 ஏக்கரும் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 52 ஏக்கர் காணிகளுமே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கமானது பொது மக்களினம் காணிகளை படிப்படியாக விடுவித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே நேற்று இந்தக் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.