பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜோத்பூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சர்பூர், குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிவைத்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை அரசு மற்றும் பொதுமக்கள் முன் வைப்பதில் சீமந்த் லோக் சங்கதன் என்ற தன்னார்வ தொண்டுஅமைப்பு முக்கியப் பங்காற்றி; வருகிறது.
இந்த அமைப்பின் தலைவர் இது குறித்து தெரிவிக்கையில் அவர்களுக்கு குடியரிமை வழங்குவதற்கான ஆணை 2016 டிசம்பரிலேயே பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியுரிமைக்காக காத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்