அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேற்றவாசிகளின் பிள்ளைகளை, அவர்களிடமிருந்து பிரித்து வைக்கும் நடைமுறைக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல்ரீதியாக நோக்கப்பட்டுள்ள இப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும் நாட்டின் முதற்பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப்பும், கவனம் செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது பேச்சாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்களது குடும்பங்களிலிருந்து, சிறுவர்கள் பிரிக்கப்படுவதை திருமதி ட்ரம்ப் வெறுப்பதுடன் இரு தரப்புகளும் ஒன்றிணைந்து, வெற்றிகரமான குடியேற்றச் சீர்திருத்தமொன்றைக் கொண்டுவருமென அவர் நம்புகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துச் சட்டங்களையும் பின்பற்றும் நாடாக இருக்கும் அதேவேளை , இதயத்துடன் ஆளும் நாடாகவும் இருக்க வேண்டுமெனவும் அவர் நம்புகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க – மெக்சிக்க எல்லையூடாக நாட்டுக்குள் நுழையும் குடும்பங்களிலிருந்து சிறுவர்கள் பிரிக்கப்பட்டு, தனியாக அடைத்து வைக்கப்படும் செயற்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப்பும் அவரது அரசாங்கமும், தொடர்ச்சியாக நியாயப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது