சீனப் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அவற்றின் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிவதாகவும் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இவ்வாறு வரி விதிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் கூடுதல் வரி விதித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.
சீனாவின் இந்த வரிவிதிப்பு வர்த்தக சமநிலையை பாதிப்பதாக அமெரிக்க கூறி வந்த நிலையில், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது