இருசக்கர மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் ர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்படவேண்டியிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைதொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம்.
தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரனங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம். அதற்கமைய பொருளாதார ரீதியாக நிவாரனம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் இருசக்கர ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இது தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்