குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து காவல்துறையினரினால் தேடபட்டு வந்த 40 பேரில் இருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டு உள்ளனர். மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலை அடுத்து , மோதலை தவிர்க்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குழு மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குழப்பங்களில் ஈடுபட்டவர்கள் என 40 பேரை கைது செய்வதற்கு இலக்கு வைத்து தேடுதல்களை அன்றைய தினம் ஞாயிற்றுகிழமை இரவு முதல் n ; மேற்கொண்டு இருந்தனர்.
அந்நிலையில் ; ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்களும் காவல்துறை காவலில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
அந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை இரவு மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.