குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என புலம்பெயர் ஈழ தமிழ் அமைப்பொன்று ஜெனிவா மனித உரிமை பேரவையிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் ஈழ அமைப்பை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் புலிகள் அமைப்பு தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய அமைப்பு எனவும் குறித்த அமைப்பு கூறியுள்ளது. மரியதாஸ் பொஸ்கோ என்பவரே இந்த அமைப்பை வழிநடத்தி வருவதாகவும் வடக்கு மாகாண அமைச்சர் ஆனந்தி சசிதரனை ஜெனிவாவுக்கு இவரே அழைத்து வந்ததாவும் அதில் கூறப்பட்டுள்ளது.