அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரித்தானிய பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.
எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
இந்த புதிய உத்தரவு அமுலுக்கு வந்துள்ள நிலையில் சுமார் 2000 குழந்தைகள் அவர்களது பேற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது போல் வைக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் பிரித்தானிய பிரதமரும் கணடனம் வெள்யிட்டுள்ளார்.
அமெரிக்க குடியேறிகளின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது மிகுந்த வேதனையை உண்டாக்குவதாக குறிப்பிட்டுள்ள அவர் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கூண்டுகள் போன்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தவறை ஏற்க முடியாது எனவும் பரித்தானிய அரசின் அணுகுமுறை இதுவல்ல எனவும் தெரிவித்துள்ள தெரசா மே அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்கும் போது இது தொடர்பாக பேச போவதாகவும் தெரிவித்துள்ளார்.