ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அரசின் விருப்பமாக உள்ளது. இதற்கான பணிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவது எங்களின் மிகப்பெரிய இலக்கு. பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணிகளில் ஈடுபட நமது பாதுகாப்பு படை எப்போதும் தயாராக உள்ளது.
மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பயங்கரவாதிகளின் எந்தவிதமான தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.