காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தமை தொடர்பாகவே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்தமைக்காக 2 தலித் சிறுவர்களை கிணற்றின் உரிமையாளர்கள், நிர்வாணப்படுத்தி தாக்கியிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வந்தநிலையில் இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டடிருந்த நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர்.
இதனையடுத்து மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டி குழந்தைகள் உரிமைபாதுகாப்பு ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தநிலையில் குழந்தைகள் உரிமை ஆணையம் ராகுல்காந்தி மற்றும் டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது