கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டமை மற்றும் உணவு மறுக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச்சியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டமாஸ்கஸ் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளில் தொடர்ந்து குண்டு வீசியமை போர் குற்றமாகும் என கிளர்ச்சியாளர்கள் குழு மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது