221
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இந்திய துணை தூதுவர் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
பாடசாலை மாணவர்களிற்கு இங்கு விசேட யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியை இந்திய துணை தூதரகத்தின் யோகா ஆசிரியர் சூரியகுமார் வழங்கினார். இதில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உப அதிபர் மேனகா கிருஸ்ணபிள்ளை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட இந்திய துணை தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love