குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று வியாழக்கிழமை(21) காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது. -குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை(21) காலை 7.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
-இந்திய துணைத்தூதரக அதிகாரி ராமேஸ்வர் பக்தா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் கலந்து கொண்டார்.-இதன் போது மாணவர்களுக்கு விசேட யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.இதன் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.