குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை இன்று வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதி நிதி ஒட்தார குணவர்த்தன கலந்து கொண்டதோடு,விருந்தினர்களான மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.