இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ(Benjamin Netanyahu) வின் மனைவி சாரா மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் கொள்வனவு செய்தி போது சுமார் 1 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியில் போலிக்கணக்கு காட்டியதாக அவர்மீதும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் மீதும்; சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தை தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டமை உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது. 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருக்கும் 68 வயதான நெட்டன்யாகூ மீதும் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது