இலங்கையில் அரசாங்கத்தின் மூலம், மக்களுக்கான பாதுகாப்பான குடிநீரை வழங்கும் சேவை, மிகவும் குறைந்த கட்டணத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்துறையில் அரச மற்றும் தனியார் கூட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திடடமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு தற்போது இலங்கை சென்றுள்ள நேர்வே நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜேன்ஸ் புரோலிக் ஹொல்டெ தலைமையிலான தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நேர்வேயின் ஆய்வுக் கப்பலின் வருகைக்கு சமநிகழ்வாக இங்கு வருகை தந்துள்ள இராஜாங்க அமைச்சர், சிரேஷ;ட அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
நீரேந்து பகுதிகளைபப் பாதுகாக்கவும், நீர் மூலவளங்களைக் கண்டறிந்து அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவது பற்றியும் நாம் கூடிய அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். இலவச கல்வி, இலவச மருத்துவ சேவை போன்றே வறுமை ஒழிப்பு முதலான சேவைகள், முதலான மக்கள் நலன்புரி திட்டங்களை செயற்படுத்தப்பட்டுவரும் எமது நாடு உல்லாசப் பயணத்துறை, மீன் ஏற்றுமதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஆடைக்கைத்தொழில் முதலானவற்றின் மூலம் கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டிவருகிறது. அதேவேளை, மகளிர் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவருவதுடன் பெண்கள் உயர்கல்வித்துறையிலும், அரச உயர்பதிவிவகிப்பதிலும் கூடுதலான ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அரசங்கம் அரசயில் துறையிலும் பெண்களின் கூடுதல் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள ஆர்வமூட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சரின் வருகை இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மற்றும் நற்புறவையும் வலுப்படுத்தி சுற்றாடல் மூலம் ஏற்படக்கூடிய சவால்கள், கடலசார் கைத்தொழில் முதலான விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படும் என இலங்கைக்கான நேர்வே தூதுவர் தோர்பியோன் கவ்ஸ்தர்சேத்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேர்வே இராஜாங்க அமைச்சர் ஜேன்ஸ் புரோலிக் ஹொல்டெயின் இலங்கை வருகையானது அந்நாட்டின் ஆய்வுக்கப்பலின் வருகைக்கு சமாந்தரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அரசியல் களநிலவரம் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றை அறிந்து கொள்வதிலும் நேர்வே இராஜாங்க அமைச்சு ஆர்வம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கதகும்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான நேர்வே தூதுவர் தோர்பியோன் கவ்ஸ்தர்சேத்தர் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.