குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி சென்திரேசா பெண் கல்லூரி பாடசாலையில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பில் பாடசாலை சமூகம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் பாடசாலை சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள சென்திரேசா பெண் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டில் உள்ள ஒரேயோரு நீர்த்தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டு கடந்து ஆறு மாதங்களாக நீர் வெளியேறிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் நீர் வெளியேறிக்கொண்டிருப்பதனால் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் நீர் நிரப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பாடசாலை சமூகம் உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நீர்த்தாங்கியிலிருந்து ஒரு இஞ்சி குழாய் வழியால் வெளியேறும் அளவுக்கு நீர் தொடர்ந்தும் வெளியேறி வீண் விரையமாகிக்கொண்டிருக்கிறது. அத்தோடு நீர்த தாங்கியின் கீழ் நிலப்பரப்பில் மின்சார வயர்கள் கிடப்பதனால் அவையும் மாணவர்களுக்கு எவ்வேளையிலும் ஆபத்தினை ஏற்படுத்தலாம் என மாணவர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்