தான் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்கிறேன் எனவும் இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனவும் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். .இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடிய பின்னர், இங்கிலாந்துடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் எதிர்வரும் 27ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதிவரை விளையாடவுள்ளது.
சுமார் 75 நாட்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டது எனவும உடல் சிறப்பாக உள்ளதாக உணர்வதாகவும் இதனால் போட்டிக்கு முழுமையாக தயாராகியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்