குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விடுதலைப் புலிகள் கிளிநொச்சிக்கு வந்து பணத்தை சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வருவதை தடை செய்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தொடர்பிலான இரங்கல் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வர ஆதரவளிப்பதாக கூறி அப்துல் காதர் எமது அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டார். விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 14 பேர் கிளிநொச்சிக்கு சென்று பணத்தை சேகரித்த பின்னரே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அப்துல் காதர் போன்ற உணர்வுமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் இருப்பார்களேயானால், அவர்கள் பற்றியும் எண்ணிப்பார்ப்பார்கள் என நினைக்கின்றேன்.
நான் இந்த வர்த்தமானியை அவையில் தாக்கல் செய்கிறேன். காதர் உட்பட அப்போது எம்முடன் இணைந்துக் கொண்டவர்களுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் இந்த வர்த்தமானியை அவையில் சமர்பிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்