எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பேரணியின் மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தபோது, மக்கள் கூட்டத்துக்கிடையில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இ இந்த சம்பவத்தில் காயங்களின்றி உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என குறிப்பிட்டுள்ளார்.