குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய இளைஞர் சேவை மன்றம் வருடா வருடம் நடத்தும் தேசிய மட்ட விளையாட்டு விழவிற்கான இளைஞர் யுவதிகளை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற்கட்டமாக பிரதேச ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் 30 ஆவது பிரதேச விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை(23) காலை மன்னார் பொது மைதானத்தில் ஆரம்பமானது .
மன்னார் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சைமன் சில்வா தலைமையில் ஆரம்பமான இவ் விளையாட்டு நிகழ்வுக்கு மன்னார் நகர சபையின் உபதலைவர் செபஸ்ரியான ஜான்சன் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோக ராஜா , மன்னார் இளைஞர் சேவை மன்றத்தின் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி டியூக் குருஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய பிரதிநிதிகளான ஜோசப் நயன் மற்றும் கலாதரன் ஜசோதரன் மற்றும் மன்னார் பிரதேச சம்மேளன பிரதி நிதிகளும் விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 100ற்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் இவ் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும், சான்றிதள்களையும் பெற்றுக் கொண்டனர்.
குறித்த பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீரர் வீராங்கனைகளும் எதிர்வரும் யூலை மாதம் நடைபெற உள்ள மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.
1 comment
Best option for the Tamils is sports to achieve the ultimate goal. Take the case of Africans. They are there in every Team. The worst affected Ethopia also has representatives. This field is opened for all in the world. Who ever has talents can shine without disparity.This field not only bring money but also parity of status. We must promote sports in our community with true enthusiasm.