குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மக்கள் பரிந்துரை இயக்க அங்கத்தவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஒத்துழைப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை (23) மாலை சிரமதான பணிகள் இடம்பெற்றது. குழந்தைகள் சிகிச்சை பிரிவின் அருகில் உள்ள அணைத்து பகுதிகளிலும் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பகுதியில் அடர்ந்த புதர்களாகவும் குப்பைகளாலும் நிறைந்து காணப்பட்டமையை தொடர்ந்து குறித்த துப்பரவு பணியானது மேற்கொள்ளப்பட்டது.
இவ் பணிகளில் சாந்திபுரம், பெரியகமம், தரவன் கோட்டை, தோட்டக்காடு, எழுத்தூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 100க்கு மேற்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானப்பணிகள் இடம் பெற்றது. சுpரமதானப்பணிகளின் இறுதியில் மன்னார் மக்கள் பரிந்துரை இயக்கம் சார்பாக வைத்தியசாலையின் சிறுவர் பிரிவின் சிகிச்சை பெரும் சிறுவர்களின் பாவனைக்காக ஒரு சலவை இயந்திம் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.