இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார். இதற்காக ஒரு மாதத்துக்கு சுமார் 1000 விண்ணப்பங்கள் அளவு கிடைப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்ள, மாதம் ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள்…
146
Spread the love