வடக்கு கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமானது சீனாவின் திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் சீன நிறுவனம் வீடுகளை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணை போனதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடமைப்புத் திட்டமானது சீனாவின் திட்டம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் இது குறித்த ஏனைய விபரங்களும் தமக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீட்டுத்திட்டமானது முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகளுக்கு மாற்றானது எனவும் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருப்தி வெளியிட்டுள்ள நிலையில் தற்போதுதான், இது ஒரு சீனத் திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வீட்மைப்புத்pட்டத்துக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்படுகின்றநிலையில் அது தமக்கு கவலை அளிக்கிறது எனவும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.