சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பெரும்பகுதியை ஐ.எஸ். அமைப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் ஈராக் ராணுவம் அவற்றினை கைப்பற்றியுள்ளது. எனினும் அவர்கள் அங்கிருந்து அயல்நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்று ஈராக் மீது தாக்குதல்களை Nமுற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சிரியாவில் தங்கியிருக்கும் ஐ.எஸ். அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க மற்றும் ஈராக் விமானப்படைகள்; ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின்மீது நேற்றிரவு ஈராக் விமானங்கள் நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் ஐ.எஸ். ஆமைப்பின் போர்துறை அமைச்சர் , ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உள்பட 45 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது