வடக்கு ஜெர்மனியின் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக ஒரு வீட்டின் பெரும்பகுதி பெயர்ந்து கீழே விழுந்ததில் கீழே நின்றிருந்த ஒரு கார் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்டளது.
மேலும் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகாமையில் வசித்தவர்கள் உள்பட மொத்தம் 25 பேர் காயமடைந்துள்ள நிலையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதலா என்பது குறித் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக சில வீடுகள் தீபிடித்து எரிந்ததாகவும் தீயணைப்பு படையினர் நெடுநேரம் போராடி, தீ மேலும் பரவாதவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து அந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுவதை தடுக்கும் நடவடிக்கையில் மீட்பு படையினரும், கட்டிட பொறியாளர்களும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.