124
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை நேற்றைய தினம் கைதுசெய்த காவற்துறையினர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை நீதிவான் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்த காவற்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love