எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த மிகவும் பொருத்தமானவர் மகிந்த ராஜபக்சவே எனக் கூறியுள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்ச நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி நிச்சயமானது எனவும் விமலவீர திஸாநாயக்கவுக்கும் அது பொருந்தும் எனவும் கூறிய அவர், தனது தாயின் குடும்ப பெயர் திஸாநாயக்க என்பதால், விமலவீர திஸாநாயக்கவும் ராஜபக்சவினரின் உறவினர் என்று கூறினாலும் பிரச்சினையில்லை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.