நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தில் நேற்றையதினம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே இடம்டபெற்ற மோதலில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தக் கலவரம் காரணமாக பலர் காயம் அடைந்துள்ளதுடன் 50-க்கு மேற்பட்ட வீடுகளில் கொள்ளைடியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய நைஜீரியாவில், நிலத்துக்காகப் பல தசாப்தங்களாக இவ்விரு இனக்குழுக்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது