ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால், இரண்டு மாதங்களுக்குள் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்ப வழங்க தாயாராக இருப்பதாகமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார். நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (25.06.18) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வணக்கத்துக்குரிய வென்டருவே உபாலி தேரரின் தலைமையில் தனது பிறந்த நாளுக்கு இடம்பெற்ற சமய நிகழ்வு, ஒரு தனிப்பட்ட விஷயம் எனவும், இதனை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.