395
போதையொழிப்பு தினத்தை முன்னிட்டு போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்றையதினம் சுமார் ஒரு மணிநேரம் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலை முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மாணவர்கள் புகைத்தலை ஒழித்து புதுயுகம் படைப்போம், போதை அது சாவின் பாதை, மேதையை அழிக்கும் போதை, போதையை தொடராது சாதனை படைப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
Spread the love