குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மல்லாவி பிரதேசத்திலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பல இலட்சங்கள் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை பூநகரி காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். நேற்றைய தினம்(25) காவல்துறையினரால் கைப்பற்ற மரக்குற்றிகள் சுமார் எட்டு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான எனத் தெரிவிக்கப்படுகிறது.
மல்லாவி பிரதேசத்திலிருந்து ரிப்பர் ரக வாகனம் ஒன்றில் மறைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள், பூநகரி சங்குப்பிட்டி பாலமருகில் அமைந்துள்ள சோதனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டன.
ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டு அதன் மேல் கற்களால் மூடப்பட்டு கற்கள் எடுத்து செல்வது போன்று கடத்தப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு n காவல்துறையினாரால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமாக சோதனை மேற்கொண்ட போதே குறித்த மர குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மரக்குற்றிகளை ஏற்றி சென்ற ரிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கும் காவல்துறையினர் இவ்வாறு பல்வேறு தடவைகளில் யாழ்ப்பாணத்திற்கு மரக்குற்றிகள் கடத்தப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.