141
சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் பொல்கம்பல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகள் நான்கினையும் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத்தரப்புகள் தெரிவித்துள்ளன.
மதுகம, கலபடவத்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இன்றையதினம் குறித்த நபரை மதுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ள மதுகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love