நல்லாட்சி அரசாங்கம் இதுவரை மக்களுக்கு செய்த சேவை என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் பழிவாங்ல்கள் மட்டுமே என்றே பதில் கூற முடியும் என்ன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் பழிவாங்கல்கள் காரணமாக மக்கள் அரசாங்கத்தின் உண்மையான நிலைமையை புரிந்துக்கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து எம்மை பழிவாங்கி வருகிறது. மக்களின் கவனத்தை பல பக்கங்கள் திசை திருப்பும் போது மக்கள் வாழ்க்கை செலவு பிரச்சினையை மறந்து விடுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்கள் முட்டாள்கள் இல்லை. அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்துள்ளது என்பதை அவர்கள் புரிந்துக்கொண்டுள்ளனர். பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை அரசாங்கம் மறந்து விட்டது. அவர் தற்போது வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கின்றார் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.