ஜம்மு காஷ்மீரில் சிரேஸ்ட பத்திரிகையாளர் சுஜத் புகாரி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உட்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் சுஜத் புகாரி கடந்த 14-ம் திகதி இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகள் மூவரை ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி எனவும் ஏனைய 2 பேர் தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி, கடந்த பெப்ரவரியில் காஷ்மீரிலுள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது காவல்துறையினரிடமிருந்து தப்பியோடியவர் எனவும் இவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துiயினர் அவரை Nதுடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.